1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (12:19 IST)

ரசிகர்கள் விரும்பிக் கேட்டதை செய்த தயாரிப்பாளர் சஷிகாந்த்!

ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷின் புகைப்படத்தை ரசிகர்கள் விரும்பிக் கேட்க அதை தயாரிப்பாளர் சஷிகாந்த் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலிஸ் நாளை மறுநாள் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரைலரில் தனுஷ் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்க அவரை சுற்றி பலர் துப்பாக்கி சூழ நிற்கும் காட்சி அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து அந்த புகைப்படத்தை வெளியிடவேண்டும் என சஷிகாந்திடம் பல ரசிகர்கள் கேட்டனர். அதையடுத்து இப்போது அந்த புகைப்படத்தை சஷிகாந்த் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.