செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2017 (05:01 IST)

மனைவியை கிண்டல் செய்த நெட்டிஸன்களை வறுத்தெடுத்த சரண்யாவின் கணவர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சரண்யா மோகனின் குண்டான புகைப்படம் இணையத்தில் வெளிவந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் 'எப்படி இருந்த சரண்யா' இப்படி ஆயிட்டிங்க ' என்ற பாணியில் கலாய்த்து தள்ளினர். இதனால் பொங்கி எழுந்த சரண்யா நேற்று தனது ஃபேஸ்புக்கில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார்



 


இந்த நிலையில் இன்று அவருடைய கணவர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது சரண்யா வெயிட் போட்டது முக்கியமான பிரச்சனை இல்லை. மேலும் என் மனைவி திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு வெயிட் போட்டதை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை என்று அரவிந்த் தெரிவித்துள்ளார்.

சரண்யாவின் கணவர் கொடுத்த பதிலடியை அடுத்து கிண்டல், கேலி செய்த வந்த நெட்டிசன்கள் இதற்கு மேலும் இந்த பிரச்சனையை கையில் எடுக்க வேண்டாம் என்று நினைத்து அடுத்து பிரச்சனையை தேடி சென்றுவிட்டனர். எனவே இனிமேல் நெட்டில் சரண்யாவின் குண்டுப்பிரச்சனை இருக்காது என்றே கருதப்படுகிறது.