சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.
இந்நிலையில் இந்த படம் திரையரங்கின் மூலமாக மொத்தம் 30 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து கேரியர் பெஸ்ட் வசூலை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வரை மல்டிப்ளக்ஸ்களில் சில காட்சிகள் ஓடிவரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி5 ஓடிடி தளத்தில் வரும் செப்ட்மபர் 1 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.