1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (18:12 IST)

ஆக்‌ஷன் அடிதடியில் இறங்கிய சந்தானம்

காமெடி வேடங்களில் நடித்துவந்த சந்தானம், ஓடி ஓடி உழைக்கணும் படம் மூலம் முதன்முதலாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். 


 

 
கே.எஸ்.மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் கலக்கி வருகிறாராம் சந்தானம். சமீபத்தில் படத்தில் வில்லனாக நடிக்கும், ஸ்டண்ட் மாஸ்டர்  சில்வாவுடன் சந்தானம் மோதும் காட்சியை படமாக்கினர். 
 
தேர்ந்த ஆக்‌ஷன் நடிகரைப் போல் துள்ளிக் குதித்து சந்தானம் நடித்ததாக  படக்குழு கூறியது. சந்தானம் கராத்தேயில் பிரவுன் பெல்ட்  வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.