1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:52 IST)

சமுத்திரக்கனியின் சங்கத்தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் கருணாஸ் நடித்துள்ள சங்கத்தலைவன் படத்தின் ரிலீஸ் இம்மாதம் பிப்ரவரி 26 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம் தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது.

வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, சுனு லக்ஷ்மி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் அசுரன் பட கதையை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் இந்த மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.