சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (11:07 IST)

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம், இயக்குனர் அறிவிப்பு!

’பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் உலக புகழ் பெற்ற பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் அஸ்வின் இயக்கத்தில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரபாஸ் நடிக்க உள்ள 25வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’ஸ்பிரிட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த படத்தை சந்தீப் ரெட்டி இயக்க உள்ளதாகவும் யூவி மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்த ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 14 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.