திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 23 நவம்பர் 2020 (15:50 IST)

இயற்கை அழகிற்கு போட்டியாக போஸ் கொடுத்த நடிகை சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
 
அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் "48 நாட்கள் ஈஷா கிரியா யோகம் கடைபிடித்து தியானம் செய்து வந்தார். பின்னர் மாமனார் நாகர்ஜூனாவுடன் சேர்ந்து க்ரீன் இந்தியா சேலஞ் மூலம் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்டு அதை மற்ற நடிகைகளையும் கடைபிடிக்க சொன்னார். இப்படி தொடர்ந்து நல்ல காரியங்களை செய்து வரும் சமந்தா தற்ப்போது அழகிய நீச்சல் குளத்தின் அருகில் நின்றுக்கொண்டு இயற்கையை ரசித்தபடி பின்னழகை காட்டி ரசிகர்களை ரசனையில் மூழ்க்கடித்துள்ளார் .