திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (07:55 IST)

லாக்டவுனில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள்: சமந்தா வெளியிட்ட வீடியோ !

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை அவர் வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு தட்டு, கோகோபீட், விதைகள் மற்றும் குளிர்ச்சியான அறை மட்டும் கொண்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்தார். அத்துடன் கிரீன் இந்திய சேலஞ் மூலம் வீட்டில் மரக்கன்று நட்டு அதை மற்றவர்களையும் பின்பற்ற சொன்னார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் லாக்டவுனில் தான் கற்ற்றுக்கொண்ட பல விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "உங்கள் சொந்த உணவை வளர்ப்பது உங்கள் சொந்த பணத்தை அச்சிடுவது போன்றது - ரான் பின்லே" என் வாழ்நாள் முழுவதும் உணவை எடுத்துக் கொண்ட பிறகு, இந்த கொரோனா லாக்கடவுன் எனக்கு ஒரு புதிய உணவு முறையையும் ஒரு புதிய பொழுதுபோக்கையும் கற்றுக் கொடுத்தது. நான் என் சொந்த வீட்டில் என் சொந்த உணவை வளர்க்க கற்றுக்கொண்டேன்! ஒரு பதற்றமான அனுபவம் தான் ஆனால் இது நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என கூறி ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தியுள்ளார்.