செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (18:19 IST)

’புஷ்பா’ படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் சமந்தா?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. தமிழ் தெலுங்கு உள்பட மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பதும் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் அவர்களுக்கு சமந்தா மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆகவே அவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது