1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 ஜூன் 2017 (22:00 IST)

சமந்தா இவருடன் தான் ரொம்ப நெருக்கமாம்; வருந்தும் வருங்கால கணவர்

சமந்தா என்னைவிட என் அம்மாவிடம் தான் மிகவும் நெருக்கமாக உள்ளார் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.


 

 
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தா பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர். இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் வெகு நாட்களாக தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. சமந்தா ரசிகர்கள் எப்போ திருமணம் என மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 
சமந்தா படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் திருமணம் தள்ளிப்போனது. இவர்களது திருமணம் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. சமந்தா திருமணத்திற்கு பிறகு தொடந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.
 
சமந்தா என்னைவிட என் அம்மாவிடம் தான் மிகவும் நெருக்கமாக உள்ளார் என நாக சைதன்யா தெரிவித்துள்ளார். சமந்தாவும், நாக சைதன்யா அம்மாவும் தினமும் ஒரு மணி நேரமாவது போனில் பேசிக் கொள்வார்களாம்.