செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (19:38 IST)

காருக்குள் அமர்ந்தபடி சமந்தா கொடுத்த ஹேப்பி போஸ்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால் கணவர் நாகசைதன்யா மற்றும் குடும்பத்தினர் அவர் மீது கோபப்பட்டு குடும்பத்தில் பிரச்சனை வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. அதற்கு உதாரணமாக சமந்தா தனது பெயரை மாற்றிக்கொண்டார். 
 
தொடர்ந்து சமீப நாட்களாக வழக்கத்திற்கு மாறாக ஹேப்பியாக இருந்து வரும் சமந்தா தற்போது காருக்குள் அமர்ந்த படி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் லைக்ஸ் கமெண்ட்ஸிற்கு ஆளாகியுள்ளார்.