புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:34 IST)

பஜ்ரங்கி பைஜான் பார்ட் 2 எடுக்கிறோம்… அறிவித்த சல்மான் கான்!

சல்மான் கான் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பஜ்ரங்கி பைஜான்.

ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தின் கதையில் உருவான திரைப்படம் பஜ்ரங்கி பைஜான். இந்த படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் 2 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்தார். அந்த படம் சல்மான் கான் நடிப்பில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது ஆர் ஆர் ஆர் படத்தின் இந்தி ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சல்மான் கான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக மேடையிலேயே அறிவித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்த படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்தே கதை வசனம் எழுத உள்ளாராம்.