இணையத்தில் வெளியாகும் ‘சைத்தான்’
இணையத்தில் வெளியாகும் ‘சைத்தான்’
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சைத்தான்’ படத்தின் சில காட்சிகளை, ரிலீஸிற்கு முன்பே இணையதளத்தில் வெளியிட, அப்படப்பிடிப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் வருகிற நவ.17ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக, மக்களிடையே பணத்தட்டுப்பாடு நிலவுவதால், இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், சைத்தான் படத்தின் முதல் 5 நிமிடக் காட்சிகளை, நவ.17ம் தேதி, இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். இந்த காட்சிகள், படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ரசிகர் மத்தியில் அதிகப்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர்.