1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:26 IST)

இப்படியெல்லாம் வதந்தி பரப்புவதா? சாய்பல்லவி ஆவேசம்..!

நடிகை சாய் பல்லவி திருமணம் செய்து கொண்டதாக மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை ஒரு சிலர் பதிவு செய்து வதந்தி பரப்பியத்தை அடுத்து இப்படியெல்லாமா வதந்தி பரப்புவது என நடிகை சாய் பல்லவி வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
பொதுவாக நான் வதந்திகளை கண்டு கொள்வதில்லை என்றும் ஆனால் அந்த வதந்திகள் எனது குடும்ப நண்பர்களை பாதிக்கும் போது கண்டிப்பாக நான் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 
 
நான் நடிக்கும் படத்தின் பூஜை புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படத்தை எடிட் செய்து கேவலமாக வதந்தி பரப்பி இருப்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என்றும் இப்படிப்பட்ட கேவலமான காரியத்தை இனி மேலும் செய்யாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் சாய்பல்லவி தான் நடிக்கும் திரைப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட போது அவருக்கு மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படத்தை தான் மார்பிங் செய்து திருமணம் செய்து கொண்டதாக வதந்தி பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva