செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (14:53 IST)

பாவாடை - தாவணி கட்டி நடித்த ‘ஜெயம்’ சதாவா இது?

பாவாடை - தாவணியில் நடித்த சதாவின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
 
மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் சதா. அதன்பிறகு அஜித் ஜோடியாக ‘திருப்பதி’, விக்ரம் ஜோடியாக ‘அந்நியன்’ படங்களில் நடித்தார். ‘அந்நியன்’ ஹிட்டானாலும், சதாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 
சில வருடங்கள் சினிமாவில் இல்லாமல் போன சதா, வடிவேலு ஜோடியாக ‘எலி’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். தற்போது டார்ச் லைட் என்ற படத்தில் நடிக்கிறார். ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத், இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்தப் படத்துக்காக முதுகுப்புறம் முழுதும் தெரியும் வண்ணம், சேலையில் அசத்தலான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் சதா. அந்த போஸ்டர்தான் இன்று வெளியாகி இளைஞர்களின் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. பாவாடை - தாவணி கட்டி நடித்த சதாவா இது என ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.