பரோட்டா மாஸ்டராக வேலை செய்யும் சாட்டை நாயகன்


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 5 மே 2017 (21:46 IST)
பாலா படத்திற்காக பரோட்டோ கடையில் பரோட்டா மாஸ்டராக பயிற்சி பெற்று வருகிறார் சாட்டை படத்தின் நாயகன் யுவன்.

 

 
நாச்சியார் படத்தை இயக்கி வரும் பாலா அடுத்து சாட்டை படத்தின் நாயகன் யுவனை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்தில் யுவன் பரோட்டா மாஸ்டராக நடிக்க உள்ளார். பாலா படத்தில் அவரது கதாபாத்திரங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும்.
 
இந்த படத்திற்காக யுவன் தனது தந்தையின் உதவியுடன் நாகூர் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் பரோட்டா போட பயிற்சி பெற்று வருகிறோம். அதோடு படத்தில் சண்டை காட்சிகள் இயல்பாக இருக்க சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம்.


இதில் மேலும் படிக்கவும் :