வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 3 ஜூன் 2017 (10:47 IST)

வதந்தி பரப்பினால் கேஸ் போடுவேன்: எச்சரிக்கும் நடிகை அனுஷ்கா!

பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு திரையுலகில் செய்திகள் பரவி  அடங்கியும் போனது. இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக  தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசும் டாபிக்காக உள்ளது.

 
இந்த காதல் கிசுகிசுவை பரப்புவது யார் என்று நோட்டம் பார்த்த அனுஷ்காவுக்கு, அது அவருக்கு நெருக்கமானவர்கள் தான்  என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் தனது உதவியாளர் ஒருவரை கூட பணிநீக்கம் செய்துவிட்டார். இதனை  தொடர்ந்து தனக்கும், பிரபாஸுக்கும் காதல் என்று வதந்தி பரப்பினால் வழக்கு தொடருவேன் என்று தன்னை  சுற்றியுள்ளவர்களை எச்சரித்துள்ளார் அனுஷ்கா. 
 
தற்போது இருவரும் சேர்ந்து ‘சாஹோ’ படத்தில் நடிக்கின்றனர். அனுஷ்காவை பரிந்துரைத்ததே பிரபாஸ் தான் என்றும்  கூறப்படுகிறது. பிரபாஸுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை திருமணம்  செய்துக்கொள்ள போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் திருமணம் பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும்  வெளியாகவில்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.