திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (21:03 IST)

''ரூ.6.10 கோடி மோசடி''..அப்பாவின் பெயரைக் கொண்டு ஏமாற்றுகிறார்- நடிகர் மீது தயாரிப்பாளர் புகார்

cinema
நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிப்பாளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஷால், தனுஷ், அதர்வா, சிம்பு . இவர்கள்  மீது சமீபத்தில் நடைபெற்ற  தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்  நடிகர் அதர்வா, ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தயாரிபபளர் மதியழகன் புகார் அளித்துள்ளார்.
 
Adharva

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை அதர்வா மதிப்பதில்லை. அவர் படத்தின் நஷ்டத்தின் ஈடுகட்டாமல், பணத்தை திரும்பித் தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அதர்வா அவரது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.