புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (10:10 IST)

ரெண்டு ரிலிஸ் தேதி அறிவித்தும் மாற்றிய ஆர் ஆர் ஆர் படக்குழு!

ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 25 ஆம் தேதி என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் சில பல காரணங்களால் ரிலீஸில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் மறு ரிலீஸ் தேதியாக மார்ச் 18 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய தேதிகளை அறிவித்து இருந்தது. ஆனால் இப்போது புதிதாக மார்ச் 25 ஆம் தேதி என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே மார்ச் 25 ஆம் தேதி தமிழில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரிலிஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.