ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது!
டிக்டாக்கில் பிரபலமாகி பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர்கள் ரவுடி பேபி சூர்யாவும், அவரின் காதலர் சிக்காவும். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் எல்லையை மீறி போகிறார்களோ என்று முகம் சுழிக்க வைக்கும் அளவுக்கு சென்றன.
அவர்களுக்கு எதிராக பலர் காவல் நிலையத்தில் கொடுத்து அவர்கள் கைது செய்யப்படும் அளவுக்கு சென்றது. ஆபாசமாக பதிவிட்ட காரணத்திற்காக கடந்த ஜனவரி 04.01.2022-ம் தேதி இருவரையும் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த வாரம் சிக்கந்தர்ஷா என்ற பெயர் கொண்ட சிக்கா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து இப்போது ரவுடி பேபி சூர்யாவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சூர்யாவிடம் இதற்கான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.