1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 20 ஜூன் 2022 (15:07 IST)

’குக் வித் கோமாளி’ : இந்த வாரம் எலிமினேட் ஆனவர் இவரா?

cooku1
’குக் வித் கோமாளி’ : இந்த வாரம் எலிமினேட் ஆனவர் இவரா?
கடந்த சில மாதங்களாக ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் மூன்றாவது சீசனாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
10 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் ஒருவர் ஒயில்ட்கார்டு போட்டியாளராக வந்த நிலையில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
 
இந்த நிலையில் நேற்று ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார். அவர்தான் ரோஷினி என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான ரோஷினி ’குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். 
 
குரோஷி, மணிமேகலையுடன் அவரது நட்பு மிகவும் ஆழமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரோஷினி இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.