வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (13:47 IST)

11 ஹோட்டல்களை போலீஸாருக்கு வழங்கிய ரோஹித் ஷெட்டி! – நன்றி தெரிவித்த மும்பை போலீஸ்!

மும்பையில் கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பணியாளர்களுக்காக தனக்கு சொந்தமான ஹோட்டல்களை iயக்குனர் ரோஹித் ஷெட்டி அளித்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்புகளில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தலைநகரான மும்பை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார், தன்னார்வலர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பிரபல பாலிவுட் ஆக்‌ஷன் பட இயக்குனர் ரோகித் ஷெட்டி மும்பையில் உள்ள தனக்கு சொந்தமான 11 ஹோட்டல்களை அவர்கள் தங்குவதற்கு இலவசமாக அளித்துள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மும்பை போலீஸ் ”கொரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து காங்கி உடையில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் ரோகித் ஷெட்டி அவர்களுக்கு நன்றிகள். மும்பை வீதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக 11 ஹோட்டல்களை வழங்கியுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.