1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (16:45 IST)

காயத்ரி ரகுராமை இப்படி கலாய்ச்சுட்டாரே ரோபோ ஷங்கர்!

காயத்ரி ரகுராமை இப்படி கலாய்ச்சுட்டாரே ரோபோ ஷங்கர்!

நடிகை ஓவியா படத்தில் நடிக்கும் போது கூட அவருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளம் கிடையாது. ஆனால் பிக் பாஸ் போட்டில் கலந்துகொண்டதும் அனைவரும் ஒரே வரிசையில் ஓவியா ரசிகர்களாக மாறியுள்ளனர்.


 
 
ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சிப்படை என இணையத்தை ஓவியா ரசிகர்கள் அக்ரமித்து வைத்துள்ளனர். அந்த அளவுக்கு ஓவியாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

 
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீப்ரியா, இயக்குனர்கள், நடிகர் சிம்பு என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
ஆனால் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் ஓவியா ரசிகர் போல தனது டுவிட்டர் பக்கத்தில் செயல்பட்டு வருகிறார். ஓவியாவை புகழ்ந்தும், அவரை எதிர்க்கும் காயத்ரி ரகுராம், நமீதா, ஷக்தி ஆகியோரை கலாய்த்தும் பதிவிட்டு வருகிறார்.