1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 அக்டோபர் 2016 (16:21 IST)

ரெமோவான ரோபோ!!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் ரோபோ சங்கர்.  சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், பெரிய திரைக்கும் அறிமுகமாகி சிறுசிறு வேடங்களில் காமெடியில் கலக்கி வருகிறார்.

 
நிறைய படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி’ படம் இவருக்கு சினிமாவில் நிலையான இடத்தை பிடித்துக் கொடுத்தது. இதன்பிறகு, இவர் நடித்த படங்களில் இவருடைய காமெடி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நர்ஸ் கெட்டப்புடன் ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான கெட்டப்பா, அல்லது ரெமோ பற்றி ஏதாவது நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பை போட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை.