திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (22:59 IST)

36 வயது பாரதிராஜா பட நாயகிக்கு திடீர் திருமணம்! காதலரை கைப்பிடித்தார்

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் ஹீரோவாக நடித்த 'தாஜ்மஹால்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை ரியா சென் தனது நீண்ட நாள் காதலர் ஷிவம் திவாரியை திருமணம் செய்து கொண்டார்



 
 
இந்த திருமணம் இருவீட்டார் மட்டுமே கலந்து கொள்ள இனிதே முடிந்தது. இந்த திருமணம் நடந்ததை ரியா சென் சகோதரி ரெய்மா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்
 
தமிழ், இந்தி, பெங்காலி உள்பட ஒருசில மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள ரியா சென்னுக்கு தற்போது 36 வயது ஆகின்றது. மேலும் அவர் தற்போது 'ராகினி எம்.எம்.எஸ் 2.2' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னரும் கணவரின் சம்மதத்தோடு தொடர்ந்து நடிப்பதாக ரியா சென் கூறியுள்ளார்.