வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (15:14 IST)

குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!

குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமிருந்து பெற்றுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகிய எட்டு குக்’களும், புகழ், பாலா, சரத், பார்வதி, மணிமேகலை, சிவா, ஷிவாங்கி, சுனிதா, ஆகிய எட்டு கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை எலிமினேஷன் என்றாலும் கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ரித்திகா என்பவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எலிமினேஷன் செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
மூன்று வாரங்களுக்கு முன் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்த ரித்விகா தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்த வாரம் பாலா கோமாளியாக வந்த நிலையில் அவர் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.