1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2017 (17:28 IST)

தமிழில் ரீமேக்காகும் படத்தில் இத்தனை ஹீரோயின்களா?

தமிழில் வெற்றிப்பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் பட ரீமேக்குகளுக்குப் பிறகு மலையாளத்தில் சூப்பர்  ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படம் மீண்டும் ஒரு காதல் கதை என்ற பெயரில் முஸ்லீம் பெண்ணை காதலிப்பது போல்  சிறப்பாக கதையை மிதரன் ஜவஹர் அமைத்துள்ளார்.

 
மித்ரன் ஜவஹர் இயக்க உள்ள இப்படத்தில் ஐந்து கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகவும், அவை ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு  மொழிகளிலும் இந்த படம் உருவாக உள்ளது.
 
ஐந்து கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தினை ஷோபா ராணி தயாரிக்கிறார். இப்படத்தில் மிகவும் பிரபலமான முண்ணனி நடிகை  நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஆட்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.