1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (14:10 IST)

செப்.22 வெளியாகிறது தனுஷின் தொடரி

செப்.22 வெளியாகிறது தனுஷின் தொடரி

தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து செப்டம்பர் 22 தொடரி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.


 
 
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் தாமதமாகி வந்தது. இந்நிலையில் படத்தை முடித்து தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பட வெளியீட்டை அறிவித்துள்ளனர்.
 
செப்டம்பர் 22 தொடரி வெளியாகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமைதான் படங்களை வெளியிடுவார்கள். இருமுகன் படத்தை வியாழக்கிழமை வெளியிட்டதால் அந்தப் படத்துக்கு 4 நாள் ஓபனிங் கிடைத்தது, கலெக்ஷனும் அதிகம். அதனால் தொடரியையும் 22 -ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடுகின்றனர்.
 
23 -ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி திரைக்கு வருகிறது.