வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (14:04 IST)

தெலுங்கில் வெளியாகிறது விஜய்யின் ‘பைரவா’

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘பைரவா’, தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகிறது.
 

 
பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு நடித்த படம் ‘பைரவா’. விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம், கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸானது. 114 ரூபாய் கலெக்‌ஷன் வந்தாலும், இந்தப் படம் தோல்விப்படம் தான் ஒரு குரூப் சொல்லி வருகிறது. 
 
இந்த நிலையில், தெலுங்கு மொழியில் இந்தப் படத்தை டப் செய்து வெளியிட உள்ளனர். கண்டசாலா ரத்னகுமார் வசனம் எழுத, வென்னெல கண்ட்டி பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் முதல் காப்பி தயாராகிவிட்டது. எனவே, இந்த மாத  இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். வர்லாம் வர்லாம் வா…