கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஹ்மான் இசையில் ஏற்கனவே இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
கடைசிகட்ட பணிகள் முடியாததால் தற்போது செப்டம்பர் 9 படம் திரைக்கு வரும் என கௌதம் அறிவித்துள்ளார்.