செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (13:31 IST)

`மெர்சல்' பட தலைப்பு குறித்து படக்குழு விளக்கம்

நீண்ட நாட்களாக பெயர் வைக்கப்படாமல் இருந்த, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் 61 என அழைத்து வந்தனர். தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது  போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது.

 
 
இந்நிலையில், பட தலைப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் நடக்கின்றன. மெர்சல் என்ற வார்த்தை அசந்து போவது, வியப்பை தருவது, இன்ப அதிர்ச்சி தருவது என்பது அதனுடைய பொருளாகும். வட சென்னை வாசிகள் இந்த மெர்சல்  வார்த்தையை அதிகம் பயன்படுத்துண்டு. விக்ரம் நடித்த `ஐ' படத்தில் இடம் பெற்ற நான் மெர்சலாயிட்டேன் என்ற பாடலுக்கு  பிறகு இந்த வார்த்தை பிரபலமானது. 
 
இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் 3 வேடங்களில் அசத்தும் வகையில் அமைந்துள்ளதாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும்  ரசிகர்களை அசர வைக்கும் என்பதாலும் இதற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.