ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (19:35 IST)

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

Vettaiyan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் வேட்டையன் படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வேட்டையன் படத்தை வெளியிடுவதால் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி மிகப்பெரிய அளவில் புரமோஷன் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வேட்டையன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது நிறுவனத்தின்  ரெட் ஜெயண்ட் கையில் சென்றுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் வசூல் வரலாறு காணாத அளவில் சாதனை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva