1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (13:22 IST)

திருமண புகைப்படங்களை வெளியிட்ட பிகில் நடிகை!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் ரெபா மோனிகா  ஜான். இப்படத்தை அடுத்து அவர் நடிகர் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார். பின்னர், விஷ்ணு விஷாலுடன் இணைந்து எஃப்.ஐ.ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், ரெபா மோனிகா ஜான் நேற்று தனது காதலர் ஜோசஃபை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் கிருஸ்தவ முறைப்படி நடந்துள்ளது. தற்போது தனது திருமண புகைப்படங்களை  நடிகை ரெபா ஜான் தனது இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வேதிகா, மிர்னாலினி ரவி உள்ளிட்ட நடிகைகள் வாழ்த்து கூறி வருகின்றனர்.