திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 13 மே 2020 (19:28 IST)

பிகில் நடிகை வெளியிட்ட ரொமான்டிக் டிக்டாக் வீடியோ..!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்த இப்படத்தில்  இந்துஜா,  ரெபா மோனிகா,  வர்ஷா,  பொல்லம்மா,  போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர்.

இவர்களில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான். இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஒருவர் முகத்தில் ஆசிட் அடித்து விடுவார். இதனால் அவர் கால்பந்து விளையாடுவதை இருந்து விலகிவிடுவார். பின்னர் விஜய் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து மீண்டும் கால்பந்து விளையாட ஊக்குவிப்பார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். எனவே பிகில் படத்தில் நடித்திருந்த மற்ற பெண்களை விட  ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் செம ரொமான்டிக்கான வசனத்தை பேசி டிக்டாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ...