வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (10:42 IST)

பிரபல நடிகையின் தந்தை மரணம்!

பிரபல நடிகையும் பின்னணிக் குரல் கலைஞருமான ரவீனாவின் தந்தை ரவீந்தரநாதன் உயிரிழந்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 2000க்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி கதாநாயகிகளுக்கெல்லாம் டப்பிங் பேசியவர் ஸ்ரீஜா. இவர் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவரின் மகள் ரவீனாவும் இப்போது முன்னணி நடிகைகளுக்கு எல்லாம் டப்பிங் பேசி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் ராக்கி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரவினாவின் தந்தை ரவிந்தரநாதன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். அவரின் இறுதிச் சடங்குக்காக உடல் சொந்த ஊரான கேரளாவுக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.