செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (11:52 IST)

எவ்ளோ க்யூட்.. இந்த குழந்தையே பாக்கணுமே! – ராஷ்மிகாவை ஏங்க வைத்த சிறுமியின் டான்ஸ்!

Rashmika
புஷ்பா படத்தின் பாடலுக்கு சிறுமி ஒருவர் ஆடியுள்ள வீடியோவை பார்த்து ராஷ்மிகா அளித்துள்ள பதில் வைரலாகியுள்ளது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ ப்ரசாத் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக வெளியான புஷ்பா நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வேகமாக தயாராகி வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற “சாமி.. சாமி” பாடல் இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை பலருக்கும் விருப்பமான பாடலாக உள்ளது. இந்த பாடல் வந்தபோதே பலரும் அதில் ராஷ்மிகா ஆடுவது போலவே ஆடி ரீல்ஸ் செய்து வந்தனர். தற்போது ராஷ்மிகா போலவே வேறு மாநில சிறுமி ஒருவர் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டரில் அதை பதிவிட்டதுடன் “இந்த நாளை இது உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இந்த குட்டி க்யூட்டியை சந்தித்தே ஆக வேண்டும். எப்படி சந்திப்பது?” என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.