புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (16:27 IST)

பாலிவுட்டுக்கு செல்லும் ராஷிகண்ணா… அதுவும் முனன்ணி நடிகருக்கு ஜோடியாக!

நடிகை ராஷிகண்ணா இந்தியில் உருவாகும் லூதர் வெப் சீரிஸீல் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

ஒரு மொழியில் வெளியாகும் படங்களை வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஓடிடி தளங்களில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் கிடைக்கும் வெப் சீரிஸ்கள் கூட இப்போது ரீமேக் செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஷாருக் கான் மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் உரிமையை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இப்போது பிரிட்டனில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூதர் என்ற க்ரைம் த்ரில்லர் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷிகண்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.