முத்தம் கொடுப்பதில் தீபிகா சிறந்தவர்; முன்னாள் காதலர் ரன்வீர் சிங்
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் என்று அவரது முன்னாள் காதலர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தது. பின் இருவரும் மீண்டும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இவர்கள் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகின்றனர்.
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய ரன்வீர் சிங், தனது புதிய காரில் தீபிகாவை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றினார். இதனிடையே ரன்வீர் சிங் வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ரன்வீர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா குறித்து பேசும்போது, அவர் சிறந்த கிஸ்ஸர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபிகாவின் முன்னாள் காதலர் ரன்வீர் சிங் இதுபோன்ற ஒரு செய்தியை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.