திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:54 IST)

ஷாருக் கான் படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்!

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடிகர் ராணா டகுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி இணைந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடத்தில் நடிக்கும் ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இப்போது ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ராணா டகுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு ரஹ்மானும், பின்னணி இசைப் பணிகளுக்கும் அனிருத்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.