செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:15 IST)

ஷிவானியை போட்டோ எடுத்த ரம்யா பாண்டியன்: வைரல் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் இன்று அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் அவர் பதிவு செய்துள்ள கேப்ஷனில் இந்த புகைப்படத்தை எடுத்து ரம்யா பாண்டியன் என்று குறிப்பிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது 
 
ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு அழகாக போட்டோ எடுக்க வருமா என்று ஆச்சரியத்துடன் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பதால் அந்த நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சரி இருவரும் நெருக்கமான தோழிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது