1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 மே 2020 (12:50 IST)

முழுக்க முழுக்க ஆபாசம், சில காட்சிகள் மட்டும் த்ரில்: ராம்கோபால் வர்மாவின் கிளைமாக்ஸ் டிரைலர்

முழுக்க முழுக்க ஆபாசம், சில காட்சிகள் மட்டும் த்ரில்
சர்ச்சைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா தற்போது ஆபாச நடிகை மியா மால்கோவா என்பவர் நடித்து வரும் ’கிளைமாக்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் கடந்த வாரம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீசரை வெளியிட்டு பெரும் பரபரப்பை இயக்குனர் ராம்கோபால் வர்மா ஏற்படுத்தினார். இந்த டீசரில் மியா மல்கோவாவின் அதிகபட்ச கவர்ச்சி காட்சிகள், அரை நிர்வாண காட்சிகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு உள்ளார் ராம்கோபால் வர்மா. இரண்டு நிமிடம் 4 நொடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஆபாச காட்சிகள் தான் உள்ளது. முழு நிர்வாண, அரைநிர்வாண, உடலுறவு காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த வீடியோவை வயது வந்தவர்களுக்கான வீடியோ என்று யூடியூப் குறிப்பிட்டுள்ளது
 
இந்த படத்தின் டிரைலரில் பெரும்பாலான காட்சிகள் கவர்ச்சியாகவும் ஒரு சில காட்சிகள் மட்டும் த்ரில்லாக இருக்கிறது என்பதும் இந்த படம் வெளியானால் இளைஞர்களிடையே மாபெரும் வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.