திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (17:07 IST)

ரூ. 4 கோடி ஆட்டயப்போட்ட ரம்பா... சர்ச்சை தயாரிப்பாளர் தடாலடி!

பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் அஜித் தன்னிடம் 1996 ஆம் ஆண்டு ரூ 6 லட்சம் பணம் வாங்கி அதை தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பினார். அதாவது, ‘1996 ஆம் ஆண்டு அஜித் என்னிடம் அவரின் பெற்றோர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று 6 லட்சம் வாங்கினார். 
 
அதற்காக எந்த கையெழுத்தும் வாங்காமல் நம்பிக்கையோடு நான் கொடுத்தேன். அதற்கு பதிலாக எனக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்றுவரை படம் பண்ணித்தரவில்லை. நான் தொலைபேசி செய்தாலும் எடுப்பதில்லை. 1996 ஆம் ஆண்டு 6 லட்சம் என்றால் இன்று அதன் மதிப்பு என்ன?’ எனக் கேள்வி எழுப்பினார். அஜித் ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய பூதாகாரத்தை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் அஜித்தை தொடர்ந்து நடிகை ரம்பாவும் தன்னிடம் ரூ. 4 கோடிக்கு அதிகமாக பணத்தை ஏமாற்றியதாக கூறியுள்ளார். அதாவது,  3 Roses படத்தின் போது ரம்பா தன் சகோதரனை வைத்து படம் தயாரித்திருந்தார். அதற்காக ரம்பா என்னிடம் 4 கோடிக்கும் மேல் என்னிடம் பணம் வாங்கினார். திருப்பி கேட்டால் தரவில்லை. இதையடுத்து போலிஸ் புகார் தெரிவித்தேன். பின்னர் வந்து விசாரித்தார்கள். அதன்பின் 3. 5 கோடி தருகிறேன்னு ரம்பா சகோதரன் சொல்லிவிட்டு அதன்பின் அதை தராமல் ஏமாற்றினார். 
 
இதையடுத்து உடனே ரம்பா, மீடியாவை கூப்பிட, PRO நெல்லை சுந்தரம் ஒட்டுமொத்த மீடியாவை கூப்பிட்டதால் நடிகைக்கு சப்போர்ட் செய்து நான் தான் தப்பு பண்ண மாதிரி எல்லாரும் பேசினார்கள். இது அப்போ நடந்தது. நான் பப்ளிசிட்டிக்காக நான் இப்படி சொல்லல இப்படிதான் என்னை பலர் ஏமாற்றி பணம் பறித்தார்கள் என கூறியுள்ளார்.