திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2024 (09:36 IST)

வேட்டையன் படம் பார்த்து ரக்‌ஷனை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்… ஓ இதுக்காகதானா?

தொகுப்பாளராக கலக்கி வரும் பல பிரபலங்கள் தற்போது சினிமாவுக்குள் நுழைய  ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு  நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரக்‌ஷன், துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதையடுத்து 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காத ரக்‌ஷன் அதன் பின்னர் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதனால் அவருக்குப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக தான் ஹீரோவாக நடிக்க இருந்த இரண்டு படங்களில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் வேட்டையன் படம் ரிலீஸுக்குப் பின் அவர் ரசிகர்களால் பயங்கரமாக கேலி செய்யப்பட்டு வருகிறார். ஏனென்றால் படத்தில் மொத்தமே அவர் காட்சிகள் ஐந்து நிமிடத்துக்கு மேல் இல்லை. அப்படி வரும் காட்சிகளில் கூட அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. காட்சிகளில் இடம்பெறும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் போலதான் அவரும் வந்தார் என்றெல்லாம் ட்ரால்கள் எழுந்துள்ளன. இந்த ஐந்து நிமிடக் காட்சிக்காகதான் இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்றீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.