1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:45 IST)

மீண்டும் இணைந்த பிரபுதேவா- ராஜு சுந்தரம் காம்போ!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் பஹீரா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமைக்க உள்ளார் ராஜு சுந்தரம்.

திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார். 

இந்நிலையில் தற்போது பிரபுதேவா வைத்து பஹிரா என்ற புது படத்தை இயக்கி வருகிறார். காதலர் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும்  இந்தப் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ளார். அது சம்மந்தமான படப்பிடிப்புத் தள புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.