1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (12:41 IST)

ப்ளாக்பஸ்டர் ஹிட் அண்ணாமலை; ரஜினியை சந்தித்த சுரேஷ் கிருஷ்ணா!

Rajnikanth
தமிழ் சினிமாவில் ஹிட் காம்போவான இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா – ரஜினிகாந்த் நேரில் சந்தித்துக் கொண்டனர்!

தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை அளித்த கூட்டணிகளில் ஒன்று ரஜினிகாந்த் – இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி. இந்த ஹிட் காம்போவின் தொடக்கமே அண்ணாமலைதான். பாலசந்தர் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் மூலம் ரஜினிக்கு அறிமுகமானவர்தான் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வீரா, பாட்ஷா, பாபா என பல படங்களை நடித்தார் ரஜினிகாந்த். அண்ணாமலை வெளியாகி இன்றுடன் 30 வருடங்கள் முடிவடைகிறது. இன்றுவரை அண்ணாமலை படத்தின் பாடல்கள், தீம் மியூசிக் அனைத்தும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது.

அண்ணாமலை படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.