வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:37 IST)

ரஜினியின் குட்டிக் கதைக்கு தயாரா?... வேட்டையன் ஆடியோ வெளியீடு விவரம்!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, SR கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் தேதியை வேட்டையன் படக்குழு உறுதி செய்துள்ளது.

விரைவில் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை படத்துக்குப் பெரிதாக ப்ரமோஷன்கள் செய்யப்படாத நிலையில் இப்போது படக்குழு அந்த வேலைகளை தொடங்கியுள்ளது.