1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 15 ஜனவரி 2024 (07:40 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் ரஜினியின் வேட்டையன் ஸ்பெஷல் அப்டேட்!

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வேட்டையன் படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.15 மணிக்கு இந்த போஸ்டர் ரிலீஸ் ஆகவுள்ளது.