திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 25 மே 2017 (10:52 IST)

காலா.... ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியானது!

காலா.... ரஜினியின் புதிய படத்தின் பெயர் வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த கபாலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்திலேயே படம் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் வுண்டர் பார் தயாரிப்பதாக அறிவித்தது.


 
 
கடந்த ஒருவாரமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரை உச்சரிக்காத தமிழக மக்களே இருக்க மாட்டார்கள். ரஜினியின் அரசியல் எப்படி இருக்கும் என்பதுதான் உள்ளூர் தொலைக்காட்சி முதல் தேசிய தொலைக்காட்சி வரை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

 
இந்த நிலையில் சத்தமில்லாமல் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் மும்பைக்கு சென்றுவிட்டனர். விரைவில் ரஜினியும் மும்பைக்கு செல்லவுள்ளார்.
 
இந்நிலையில் அந்த படத்தின் தலைப்பை இன்று காலை 10 மணிக்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தின் பெயர் காலா என குறிப்பிட்டுள்ளார் அவர். கரிகாலன் என்ற பெயரை தான் காலா என வைத்துள்ளனர்.