பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டிச.12 ஆம் தேதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ரஜினி தனது ரசிகர்களுக்கு பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும், ரசிகர்கள் யாரும் தனிப்பட்ட முறையிலும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகம் வெள்ளத்தில் மிதந்த காரணத்தால் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி, மழை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.