1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (13:09 IST)

நள்ளிரவில் உதவி செய்ய தயார் - ரஜினி பட நடிகையிடம் அத்துமீறிய நடிகர்

பிரபல நடிகை ராதிகா ஆப்தேவிடம் அவருடன் நடித்த நடிகர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
கோலிவுட், பாலிவுட் மட்டுமல்ல. ஹாலிட்டிலும் கூட நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளை குறித்து தற்போது நடிகைகள் தைரியமாக பேச முன் வந்துள்ளனர். 
 
அன்றாடம் ஏதாவது ஒரு நடிகை தாங்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த லிஸ்டில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த ராதிகா ஆப்தே பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நடிகைகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். நானும் அவ்வாறு பாலியல் தொந்தரவுகளை சந்தித்துள்ளேன்.
 
சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் எனது முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங் முடித்துவிட்டு நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு ரெஸ்ட் எடுக்க சென்றேன்.
 
நான் தங்கிருந்த அறைக்கு செல்ல லிப்டில் சென்றேன். அப்போது அந்த லிப்டில் என்னுடன் படத்தில் நடித்த நடிகரும் வந்திருந்தார். அவரிடம் நான் பேசியது கூட கிடையாது.
 
அப்படியிருக்கும் வேளையில் அவர் என்னைப்பார்த்து நள்ளிரவில் ஏதேனும் உதவி தேவை பட்டால் என்னிடம் சொல்லுங்கள். நான் வந்து உங்கள் முதுகை தடவி விடுகிறேன் என்றார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன்.
 
இதனால் மனவேதனையடைந்த தான் இதுகுறித்து தயாரிப்பாளரிடம் புகார் அளித்த பிறகு அந்த நடிகர் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார் என கூறினார். ஆனால் அந்த நடிகரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.